மதுரையில் 40 இடங்களில் இந்தாண்டு மாநகராட்சி 'பிளே ஸ்கூல்' துவங்கப்படுகிறது.

 
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்த நிலையில், ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. இதனால் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் உயர்ந்தது.

தற்போது 6 - 8ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக நடுநிலைப்பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் இந்தாண்டு முதல் 'பிளே ஸ்கூல்' துவங்கப்படுகிறது.


இதில் 3 - 5 வயது வரை மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,''தற்போது வரை 1,000 மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. தொடர்ந்து சேர்க்கை நடக்கிறது. இக்கல்வி முழுவதும் இலவசம். குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு வாகன வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,'' என்றனர்